Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

July 17, 2017

வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் ஃபேஸ்புக்


வேலையில்லா பட்டதாரிகள் இனிமேல் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கோ, அல்லது வேலைவாய்ப்பு தரும் பத்திரிகைகளையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை அனைத்து வேலை வாய்ப்பு குறித்தும் அறிந்து கொள்வதற்காக ஃபேஸ்புக் ஏற்பாடு செதுள்ளது.

உலகின் நம்பர் ஒன் சமூக இணையதளமான ஃபேஸ்புக் தற்போது பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி பல ஆக்கபூர்வமான செயல்களுக்கு உதவுகிறது. அந்த வகையில் தற்போது வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆட்கள் எடுப்பவர்களுக்கும் ஒரு புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முதல்கட்டமாக கனடா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி ஃபேஸ்புக்கில் இனிமேல் 'Jobs' என்ற புக்மார்கக்கை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வேலை தேடுவோர் பேஸ்புக்கில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதே போல் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களும் இந்த பகுதியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திறமையானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

June 4, 2017

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 1,000 தலைமையாசிரியர் பணியிடம் காலியாகிறது: 2 ஆண்டாக பதவி உயர்வு நிறுத்தி வைப்பு


தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 2 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் சுமார் 1000 பணியிடங்கள் காலியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 4,996 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பதவி உயர்வு, பணிஓய்வு போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் சராசரியாக 400 தலைமை ஆசிரியர்கள் வரை பதவியில் இருந்து விலகுகின்றனர். இதனால், அப்பணியிடம் காலியிடமாக அறிவிக்கப்படுகிறது.  மாநிலத்தில் உள்ள காலி பணியிங்கள் அடிப்படையிலும், ஆசிரியர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

இதற்காக பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது.  இதனிடையே, தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் அப்பணியிடம் காலியாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முறையாக வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே பட்டதாரி ஆசிரியர்களை போல தங்களுக்கும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக கடந்த 2015ம் ஆண்டில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதில் இதுநாள்வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் கடந்த ஆண்டு தேதி அறிவித்தும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில் நடப்பாண்டு, வரும் மே 23ம் தேதி இதற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் முதல் வாரத்தில் தான் நடக்கிறது. இதனால், நடப்பாண்டும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்க வாய்ப்பில்லை. அவ்வாறு பதவி உயர்வு அளிக்கப்படாவிட்டால், நடப்பாண்டு மாநிலம் முழுவதும் ஏறத்தாழ ஆயிரம் உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கும்.

ஒரு பள்ளிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலைமை ஆசிரியர் தான் பொறுப்பாகிறார். அப்பணியிடம் காலியாக இருந்தால், பள்ளி ஆசிரியர்களுக்கு தான் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். அரசின் இலவச திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்கள் பற்றிய விவரங்கள் அளித்தல், கல்வித்துறை சம்பந்தமான ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்ளுதல் என ஒவ்வொரு பணிக்கும் ஆசிரியர்களை அனுப்ப வேண்டும். இதனால் கற்றல், கற்பித்தல் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தீர்ப்பு வரும் வரையில் பழைய நடைமுறையை பின்பற்றி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

May 25, 2017

அரசு வேலை தேடுபவர்களே...? அரசு வேலை வாய்ப்பு செய்திகள் தொகுப்பு உங்களுக்காக..!


டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி போன்ற மாநில மத்திய அரசு வேலையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அதற்கான தகவல்களை தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பியுங்கள். உங்களுக்காக அரசுத் தேர்வுகள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு மற்றும் மத்திய அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

டிஎன்பிஎஸ்இ குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 1953

கடைசி தேதி - 26.05.2017

மேலும் தெரிந்து கொள்வதற்கு https://goo.gl/OgtnUc
SSB காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 355

கடைசி தேதி - 04.06.2017

மேலும் தெரிந்து கொள்வதற்கு https://goo.gl/J0dkau
டிஆர்பி காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 1663

கடைசி தேதி - 30.05.2017

மேலும் தெரிந்து கொள்வதற்கு https://goo.gl/k4Wfet
இந்தியன் நேவி காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 97

கடைசி தேதி - 26.05.2017

மேலும் தெரிந்து கொள்வதற்கு https://goo.gl/deSLZ7

இந்த பயனுள்ள தகவல்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு https://www.yoyojobs.com/ என்ற இணையதள முகவரியை அனுகவும்.

May 20, 2017

அஞ்சல் துறையில் 1193 வேலை: ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


இந்திய அஞ்சல் துறையின் கேரள அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 1193 ஜிடிஎஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஜூன் 6க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: கேரள மாநிலம்

மொத்த காலியிடங்கள்: 1193

பணி: Gramin Dak Sevaks (GDS)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.appost.in/gdsonline/Home.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

May 17, 2017

வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்...!


வேளாண் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள 206 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள 206 உதவி வேளாண் அதிகாரி பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மே 22ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி / எஸ்டி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டு பிரிவினரக்கு அதிகபட்ச வயது நிர்ணய கட்டுப்பாடு கிடையாது.

கல்வித்தகுதி
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது அவசியம். இதற்குப் பின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ அக்ரிகல்சர் அல்லது ஹர்டிகல்சர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு, நேர்க்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல்தாள் டிப்ளமோ அக்ரிகல்சர் / ஹர்டிகல்சர் தகுதிக்கு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இரண்டாவது தாளில் பிளஸ்2 தகுதிக்கு பொது அறிவு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடக்கும். தேர்வு இரண்டரை மணி நேரம் நடக்கும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் 50 மதிப்பெண்களுக்கு நடக்கும்.
தேர்வு நடைபெறும் இடம்

எழுத்துத் தேர்வு கோவை, மதுரை, திருச்சி, பெரியகுளம், கிள்ளிக்குளம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் ரூ. 750/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22 மே 2017

மேலும் விபரங்களுக்கு http://14.139.13.70/Reports/Information%20brochure.pdf என்ற இணையதள முகவரியை அனுகவும்.

May 16, 2017

என்எல்சி நிறுவனத்தில் வேலை


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 131
பணியிடம்: நெய்வேலி (தமிழ்நாடு)

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Hindi Translator Gr.I - Trainee (W3) - 08
பணி: Executive Engineering (Mechanical) (E4) - 03
பணி: Executive Engineering (Electrical) (E4) - 02
பணி: Executive Engineering (Civil) (E4) - 03
பணி: Executive Engineering (C&I) (E4) - 02
பணி: Executive Engineer (Mechanical) (E4) - 14
பணி: Executive Engineer (Electrical) (E4) - 07
பணி: Executive Engineer (Civil) (E4) - 09
பணி: Executive Engineer (Control & Instrumentation) (E4) - 04
பணி: Deputy Executive Engineer (Mechanical) (E3) - 13
பணி: Deputy Executive Engineer (Electrical) (E3) - 07
பணி: Deputy Executive Engineer (Civil) (E3) - 09
பணி: Deputy Executive Engineer (Control & Instrumentation) (E3) - 05
பணி: Deputy Chief Engineer (Mining) (E5) - 15
பணி: Deputy Executive Engineer (E3) - 05
பணி: General Superintendent (Medical) (E8) - 01
பணி: Deputy General Superintendent (Medical) (E7) - 01
பணி: Dy. Medical Officer (Medical) (E3) - 04
பணி: Dy. General Manager (E7) - 01
பணி: Assistant General Manager (E6) - 06
பணி: Dy. Chief Engineer (E5) - 06
பணி: Deputy General Manager (Finance) (E7) - 06

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பெது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  THE GENERAL MANAGER (HR),
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT,
CORPORATE OFFICE, NLC INDIA LIMITED, BLOCK-1,
NEYVELI – 607801, TAMILNADU

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/nlcil_detailed_advt032017.pdf என்ற இணையதள விளம்பர அறிக்கையை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

May 15, 2017

பிளஸ்2 படித்தவர்களுக்கு விமான படையில் பணி காத்திருக்கு ! வாய்ப்பை தவற விடாதீர்கள்!


திருச்சியில், வரும் 20 மற்றும் 22ம் தேதி, விமானப் படைக்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளது. திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில், தேர்வு நடைபெறும். இதில், 1997 ஜூலை, 7ல் இருந்து 2000 டிச., 20க்குள் பிறந்தவர்கள்பங்கேற்கலாம்.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது, 50 சதவீதம் மதிப்பெண்கள் வேண்டும். ஆங்கிலத்திலும்,  50 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

தேர்வுக்கு வருவோர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை  எடுத்து வர வேண்டும்.

நகலில் சான்றொப்பமிட்டு கொண்டு வர வேண்டும். மே2௦ ல் நடைபெறும் தேர்வில், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலுார், திருவாரூர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம்.

வரும் 22ல் நடைபெறும் தேர்வில், வேலுார், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தர்மபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலுார், நீலகிரி, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு, www.airmenselection.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்.

May 11, 2017

தமிழக அரசில் சுற்றுலா அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள சுற்றுலா அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Tourist Officer - 05

தகுதி: Travel and Tourism துறையில் முதுகலை பட்டம் அல்லது ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் மற்றும் சுற்றுலாத்துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். கணினித் துறையில் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2017

மேலும் வயதுவரம்பு சலுகை, கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_11_not_eng_tourist_officer_TNGS.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

May 10, 2017

ஸ்டேட் பாங்க் அதிகாரியாக ஆசையா? ... உடனே விண்ணப்பியுங்கள்..!


ஸ்டேட் வங்கியில் 554 அதிகாரி பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வகிக்கும் வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அதிகமான கிளைகளுடன் பரந்த வங்கிச் சேவையை வழங்கி வரும இந்த வங்கியில் தற்போது சிறப்பு நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 554 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி
சி.ஏ, .ஐ.சி.டபுள்யு.ஏ, ஏ.சி.எஸ், எம்.பி.ஏ போன்ற பிரிவு படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கோரப்பட்டு உள்ளது.

வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31.03.2017ந் தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரேடு (ஸ்கேல்) 3 பணிகளுக்கும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரேடு (ஸ்கேல்) 2 பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும், உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்ததாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 18 .05. 2017ந் தேதி

May 9, 2017

இந்திய விமானப்படை பணியில் சேர திருச்சியில் மே 20,22 தேதிகளில் முகாம்


இந்திய விமானப்படை பணியில் சேர திருச்சியில் மே 20,22 தேதிகளில் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் வைத்து நடக்க உள்ளது. இந்த முகாமில் இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மே 20த் தேதி மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம், நாகை, புதுக்கோட்டை,கரூர், கடலூர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மே 20 தேதி பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மே 22 ம் தேதி வேலூர், குமரி, தேனி, தஞ்சை, தி.மலை, சென்னை, திருவள்ளூர் நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.airmenselection.gov.in இணையதளத்தினை அனுகவும்.

May 8, 2017

தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள்


தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசியரியர் பணிகள் நிரப்பப்படுகிறது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஏற் படும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. தற்போது பி.டி. அசிஸ்டண்ட் பணிக்கு 912 இடங்கள் மற்றும் பி.டி. அசிஸ்டண்ட் (ஐ.இ.டி.எஸ்.எஸ்.) பணிக்கு 202 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1,114 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2017-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பி.ஏ., பி.லிட் பட்டப்படிப்புடன், பி.டி./பி.எட் படித்தவர்கள், டி.டி.எட்.- டி.பி.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் இன்னும் பிற பாடங்களில் பி.எட். படித்தவர்களுக்கும் வாய்ப்புள்ளது. எந்தெந்த பிரிவை தேர்வு செய்து படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

2012, 2013, 2014-ம் ஆண்டுக்குரிய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருப்பவர்கள், சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, தேவையான சான்றுகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் Teacher Recruitment Board (TRB), 4th Floor, EVK Sampath Maaligai, DPI Compound, College Road, Chennai 600 006 என்ற முகவரிக்கு 10-5-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

May 4, 2017

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்.. வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள்..!


இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் - இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்
வேலையின் தன்மை - மத்திய அரசு

வேலை
மொத்த காலியிடம் - 500
வேலையிடம் - நாசிக் (மஹாராஸ்டிரா)

.ஃபிட்டர் - 285 காலியிடங்கள், டர்னர் - 12 காலியிடங்கள், கார்பன்டர் - 06 காலியிடங்கள், இயந்திரம் - 15 காலியிடங்கள் வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சார) - 20 காலியிடங்கள், மின்வியாளர் - 63 காலியிடங்கள், மெக்கானிக் (மோட்டார் வாகன) - 08 காலியிடங்கள், வரைவு (இயந்திர) - 10 காலியிடங்கள், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 04 காலியிடங்கள் , ஓவியர் (பொது) - 12 காலியிடங்கள், பாஸ்ஏ - 65 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி-
10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் வர்த்தக பயிற்சிக்கு விண்ணப்பிக்கலம். இதற்கு இணையான தகுதியினைப் பெற்றவர்களும்
விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு -
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அறிவிப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை -
மெரிட் லிஸ்ட் அடிப்படையில் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பபடுவார்கள்.

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.05.2017ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தக்கச் சான்றிதழ்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

துணை மேலாளர் (பயிற்சி),
பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்,
ஆர்கிராப்ட் பிரிவு, ஓஜார், தால்-நிப்பாட்,
நாசிக் - 422207

கொங்கன் ரயில்வேயில் பொறியாளர் வேலை


இந்திய ரயில்வே துறையின் கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள 37  மூத்த துறை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CO/P-R/01/2017

பணி: Sr.Section Engineer

மொத்த காலியிடங்கள்: 37

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electrical - 20
2. Mechanical - 02
3. Signal/Telecomm - 05
4. Civil - 07

தகுதி: பொறியியல் துறையில் Electrical,  Mechanical, Civil, Signal, Telecommunication போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600

வயதுவரம்பு:01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Favour of FA&CAO/KRCL  என்ற பெயருக்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்பவும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியி அஞ்சல் முகவரி: Assistant Personnel Officer (Recruitment), Konkan Railway Corporation Ltd, Plot No.6, Belapur Bhavan, Sec-11, CBD Belapur, Navi Mumbai-400614.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.05.2017

மேலும் http://www.konkanrailway.com/uploads/vacancy/Notification_SE-2017-FINAL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தங்களின் சந்தேகங்களுக்கான விளக்கத்தை அறிந்து கொள்ளவும்.

May 3, 2017

ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரிகள் பணியிடங்களுக்கு 161 பேர் தேவை!


ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் கிரேடு பி தரத்திலான அதிகாரிகள் பணியிடங்களுக்கு 161 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : ஆர்பிஐ வங்கியில் உள்ள கிரேடு பி தரத்திலான அதிகாரிகள் பணிக்கு 161 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆர்பிஐ வங்கியில் உள்ள அதிகாரி பணியிடங்கள் பற்றிய விரிவான தகவல்கள்

வேலை - அதிகாரிகள் கிரேடு பி
கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
மொத்த காலியிடங்கள் - 161
ஊதியம் - ரூ. 35,150/- முதல் 62, 400/- வரை
பணியிடம் - இந்தயா முழுவதும்
கடைசி தேதி - 23 மே 2017

அதிகாரிகள் கிரேடு பி (டிஆர்) - ஜெனரல்
பொதுபிரிவைச் சார்ந்தவர் 60% மார்க்குகளுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50% மார்க்குகளுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு என்ற கல்விமுறையில் கற்றிருத்தல் வேண்டும்.

அல்லது 10ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என்ற கல்விமுறையில் கற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அதிகாரிகள் கிரேடு பி (டிஆர்) - டிஇபிஆர்

பொருளாதாரம், அளவு பொருளாதாரவியல், கணிதவியல் பொருளாதாரம், ஒருங்கிணைந்த பொருளியல் பாடநெறி / நிதி, போன்றவற்றில் முதுகலை பட்டப்டிப்பில் 55% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இந்திய அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் அனைத்து செமஸ்டர்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரிகள் கிரேடு பி (டிஆர்) - டிஎஸ்ஐஎம்

புள்ளிவிவரம், கணித புள்ளிவிவரம், கணித பொருளியல், பொருளியல், புள்ளியியல் மற்றும் தகவல் ஆகிய பாடங்களில் முதுகலைப்பட்டம் ஐஐடி-கராக்பூரில் பெற்றிருத்தல் வேண்டும், பயன்பாட்டு புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்கள் படிப்பில் முதுகலைப்பட்டம் ஐஐடி பாம்பேயில் பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தது 55% மதிப்பெண்கள் அல்லது அனைத்து செமஸ்டர்களிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

கணிதத்தில் மாஸ்டர் பட்டம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் அல்லது அனைத்து செமஸ்டர்களிலும் நல்ல மதிப்பெண்களுடன் பெற்றிருத்தல் வேண்டும்.

எம். எஸ்டிஏடி படிப்பில். குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிசினஸ் அனலிட்டிக்ஸ் பட்டதாரி டிப்ளமோ படிப்பில் ஐ.எஸ்.ஐ கொல்கத்தா, ஐ.ஐ.டி காரக்பூர் மற்றும் ஐ.ஐ.எம் கல்கத்தா ஆகியவற்றின் கூட்டுப்பணியில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் அல்லது அனைத்து செமஸ்டர்களிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு - 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை - ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் - பொது பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 850/- வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்பிஐ ஊழியர்களுக்குக் கட்டணம் ஏதும் கிடையாது.

முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 23 மே 2017
பேஸ் 1 ஆன்லைன் தேர்வு - 17 ஜூன் 2017
பேஸ் 2 ஆன்லைன் தேர்வு - 7 ஜூலை 2017
மேலும் விரிவான தகவல்களுக்கு https://opportunities.rbi.org.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

May 2, 2017

விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை...வேலை...வேலை...


பாதுகாப்பு படையில் வேலை
பணி: Assistant Commandants (Group A) - (Border Security Force (BSF), Central Reserve Police Force (CRPF), Central Industrial Security Force(CISF) and Sashastra Seema Bal (SSB))
மொத்த காலியிடங்கள்: 179
தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200/- இதர பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:  www.upsconline.nic.in-என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.upsc.gov.in/sites/default/files/Notice_CAPF_2017_Engl.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.05.2017

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை
பணி:  SI - Overseer (Civil), ASI - Draughtsman,  CT (Constable) - (Mason/ Plumber/ Electrician/ Carpenter/ Painter)
மொத்த காலியிடங்கள்: 240
தகுதி: SI பதவிக்கு மூன்று வருட சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ASI பதவிக்கு மூன்று வருட டிப்ளமோ படிப்பு டிராஃப்ட்ஸ்மேன் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
Constable பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழிலில் ஓராண்டு பணி அனுபவம். மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியான
உடற் தகுதிகளும் உண்டு.
வயது வரம்பு:  Constable -  18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ASI/ Draughtsman -  18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
நஐ - 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com - என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ சோதனை மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://crpfindia.com/downloads/advertis_24217s.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.05.2017

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை
பணி: மேனேஜர் (செக்யூரிடி)
காலியிடங்கள்: 45
தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.31,705 - 45,950
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in-என்ற இணைய தளத்தில் காணப்படும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை விரைவு - பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி: Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, HO: 7,
Bhikhaiji Cama Place, New Delhi-110607
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.pnbindia.in/Recruitments.aspx
விண்ணப்பிப்பம் சென்று சேர கடைசித் தேதி: 06.05.2017

தேசிய விதைகள் கழக நிறுவனத்தில் வேலை
பணி: Assistant (Legal)- Management Trainee (Materials Management, Legal)- Asst. Co. Secy., (Production, Marketing,  Agri. Engineering, Civil Engineering,
HR,  F&A,) - Sr. Trainee (Marketing) - Diploma Trainee
(Civil Engineering,  Agri. Engineering, Electrical
Engineering)- Trainee (Agri, Technician, HR,
Accounts, stores, Laboratory)
மொத்த காலியிடங்கள்: 188
தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியே கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே
விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு: www.indiaseeds.com/career/HQ2017/HQRO150317.pdf
வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com-என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.05.2017

அஞ்சல் துறையில் வேலை
பணி: Gramin Dak Sevak (GDS)
காலியிடங்கள்: 128 (தமிழ்நாடு மட்டும்)
சம்பளம்: ரூ. 21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை:  https://indiapost.gov.in or https://appost.in/gdsonlin என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பின் மூலம் பெற்ற மதிப்பெண்கள், பிற தகுதிகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://testbook.com/blog/wp-content/uploads/2017/04/Tamilnadu-19.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.05.2017

April 29, 2017

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளர் வேலை


பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 45 மேலாளர்(பாதுகாப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager (Security)
காலியிடங்கள்: 45

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950 + இதர சலுகைககள்.

வயதுவரம்பு: 01.01.2017- ஆம் தேதியின்படி 21 - 35க்குள் இருக்க
வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50ம், மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager-Security’ by Speed/ Registered post to Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, HO: 7, Bhikhaiji Cama Place, New Delhi-110607
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.05.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

April 27, 2017

பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1500 உதவி லைன்மேன் வேலை


பஞ்சாப் அரசு பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஸ்பிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 1500 உதவி லைன்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant லினெம்மான்

மொத்த காலியிடங்கள்: 1500

வயதுவரம்பு: 39க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.6400 - 20200 + தர ஊதியம் ரூ.3400

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியுடன் லைன்மேன் பணியில் 2 ஆண்டு அப்பரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விரிவான விளக்கங்கள் அறிய
https://cra289.pspcl.in/adv.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

April 26, 2017

குரூப் - 3 தேர்வில் வெற்றி பெற்றவர்களா? - சான்றிதழ் சரிபார்க்கும் தேதி அறிவிப்பு


குரூப் - 3, மருத்துவ சார்நிலை பணி மற்றும் குரூப் -3ஏ ஆகிய மூன்று பதவிகளுக்கான போட்டி தேர்வுகளில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் விஜயகுமார் தேதிகளை அறிவித்துள்ளார்.
தடய அறிவியல் மற்றும் இளநிலை அறிவியல் அதிகாரி பணி, மருத்துவ சார்நிலை பணி மற்றும் குரூப் - 3ஏ பிரிவில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணிக்காக தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தடய அறிவியல், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு 30 காலியிடங்களுக்கு 2016, அக்டோபர் 16ல் தேர்வு நடந்தது.

இந்த தேர்வுக்கு மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மே 5ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலர், விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சார்நிலை பணியில் வட்டார சுகாதார புள்ளியிலாளர் பதவியில் 173 காலியிடங்களுக்கு ஜூன் 5ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 342 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு மே 15 முதல் 19 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் - 3 ஏ
குரூப் - 3 ஏ பிரிவில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில் 24 இடங்களுக்கு 2013, ஆகஸ்ட் 3ல் தேர்வு நடந்தது.

குரூப் 3 ஏ பிரிவில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணிக்கு 34 பேர் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு மே 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலியின் ‘ஆம்லா ஜூஸ்’ குடிப்பதற்கு ஏற்றது இல்லை.. இராணுவ கேன்டீன்களில் தடை.. மக்களே உஷார்..!


பதஞ்சலியின் ‘ஆம்லா ஜூஸ்’உண்ணுவதற்கு ஏற்றது இல்லை.. இராணுவ கேன்டீன்களில் தடை..!

இராணுவத்திற்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் கேன்டின் ஸ்டோர்ஸ் டிப்பார்ட்மெண்ட்(CSD) பதஞ்சலி நிறுவனத்தின் ஆம்லா ஜூஸ் ஆய்வக சோதனையில் தோல்வி அடைந்ததால் உன்னுவதற்கு ஏற்றது இல்லை என்று இராணுவ கடைகளில் விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துப் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு இது பிற நிறுவனங்களின் குளிர்பானங்கள் போன்றது இல்லை, இது சத்துப் பானம், மனித நுகர்வுக்கு முற்றிலும் பாதுகாப்பானது என்றும் கூறினர்.

சோதனை முடிவு
பாதுகாப்பு அமைச்சகத்தின் வட்டாரங்கள் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸினை மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பொதுச் சுகாதார ஆய்வகத்திற்குச் சோதனைக்காக அனுப்பியதாகவும் அதில் இது தோல்வி அடைந்துள்ளதாகவும் கூறுகின்றன.

விளக்கம் கேட்டு நோட்டிஸ்
எனவே விதிகளைப் பின்பற்றி உடனடியாகக் கேன்டின் ஸ்டோர்ஸ் டிப்பார்ட்மெண்ட்(CSD) குறிப்பிட்ட பாணத்தை உடனடியாக விற்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விளக்கம் கேட்டு நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

 ஆம்லா ஜூஸ்
நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் விளக்கத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ஆம்லா ஜூஸின் குறியீடு எண் 85417 என்றும், பேட்ச் எண் GH1502 என்றும் வெளியிட்டுள்ளது.

 இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் ஸ்டான்டர்டு இதற்குப் பொருந்தாது
பதஞ்சலி நிறுவனம் ஆம்லா ஜூஸ் ஆயூர்வேத மருந்து என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் விதிகள் முறையாகப் பின்பற்றிச் சோதைக்கு உட்படுத்திய பிறகு தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியது. இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் ஸ்டான்டர்டு ஆணையத்தின் நெறிமுறைகள் இதற்குப் பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

 மேலும் சோதனை
கேன்டின் ஸ்டோர்ஸ் டிப்பார்ட்மெண்ட்(CSD)வெவ்வேறு கேண்டின்களில் இருந்து பெறப்பட்ட ஆம்லா ஜூஸினை சோதனை செய்ய அரசு இயக்கி வரும் பிற சோதனை மையங்களுக்கும் அனுப்பியுள்ளது.

April 25, 2017

பட்டதாரிகளுக்கு வங்கியில் 300 புரபெசனரி அதிகாரி வேலை


மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான தேனா வங்கியில் நிரப்பப்பட உள்ள 300 புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 300
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: Probationary Officer (PO) - 300
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 45,950
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி 20 - 29க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.denabank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indiabankexams.com/wp-content/uploads/2017/04/Dena-Bank-PO-rec-Amity-PGDBF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.