Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label வளைகுடா. Show all posts
Showing posts with label வளைகுடா. Show all posts

July 24, 2017

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு!


பொருளாதார மந்த நிலை மற்றும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள நிலைமையற்றத் தன்மை காரணமாக வளைகுடா நாடுகளுக்கு பணிநிமித்தமாக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரத்து 845 இந்தியர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். கடந்தாண்டு புள்ளிவிவரப்படி அந்நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 296 பேர் மட்டுமே. சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவிகிதம் குறைந்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பொருளாதாரம் குறைந்து வருவதால்இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஈராக்-சிரியாவில் ஐ.எஸ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, அந்தப் பிராந்தியங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதும் அங்கு பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் அமெரிக்கா பின்பற்றும் உள்நாட்டு மக்களுக்கே வேலைவாய்ப்பில் அதிக பங்களிப்பு என்ற முறையை வளைகுடா நாடுகளும் கையில் எடுப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக சவுதி இந்த முறைக்கு மாறி வருவதும் சவுதிக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

July 22, 2017

தங்கம் வங்க துபாய்க்கு விமானத்தில் பறந்துசெல்லும் இந்தியர்கள் காரணம் ?


இந்தியர்கள் மீண்டும் துபாயில் இருந்து தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையில் தங்கம் மீது 3 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளதால் துபாயில் தங்கம் வாங்குவது லாபகரமாக உள்ளதாக இந்தியர்கள் கருதுகின்றனர்.

ஜூலை 1 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து துபாய் வரும் இந்தியர்கள், என்ஆர்ஐ உள்ளிட்டோர் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக நகை கடைகள் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

சவுதி தங்க சந்தையில் இரண்டு வாரங்களாக விற்பனை பயங்கரமாகச் சூடு பிடித்துள்ளது. அப்போது அதிகமாக இந்தியர்கள் தான் தங்கம் வாங்கியுள்ளனர் என்று மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் நிறுவன தலைவர் அகமது எம்பி கூறினார்.

துபாயினைப் பொருத்த வரையில் மூன்று விதமாக இந்தியர்கள் தங்கம் வாங்குகின்றனர். வளைகுடா நாடுகளில் குடியேறிய இந்தியர்கள், இந்திய சுற்றுலா பயணிகள், பயணத்தின் போது இடையில் சவுதி வந்து செல்பவர்கள்.

சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாட்டினவரும் அன்மை காலங்களில் துபாயில் தங்கம் வாங்குவதினை அதிகரித்துள்ளதாக அகமது கூறினார்.

துபாயில் தங்கம் வாங்குவது 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக நகை கடைக்காரர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய நகைகள் விரைவில் துபாயில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பாப்லி சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜிவ் கூறுகின்றார்.

துபாயில் தங்கம் வாங்குவதை விட இந்தியாவில் தங்கம் வாங்கும் போது 10 கிராமிற்கு 3,600 ரூபாய்க் கூடுதலாக விலை கொடுத்து இந்தியர்கள் வாங்குகின்றனர்.

இந்தியாவின் ஜவேரி பஜாரில் தங்கம் வாங்கும் போது 10 கிராம் தங்கம் 29,210 ரூபாய் ஆகும். இதில் ஜிஎஸ்டி, இறக்குமதி வரி ஆகியவை அடங்கும். இதுவே துபாயில் நீங்கள் தங்கம் வாங்கினால் 25,524 ரூபாய்க்கு 10 கிராம் தங்கம் வாங்க முடியும்.

2018 ஜனவரி முதல் துபாயில் 5 சதவீதம் வாட் வரி நியமிக்க இருப்பதால் தங்கம் விலை உயரும் என்றும், இந்தியாவில் பெறும் பாதிப்பு ஏற்படும் என்றும் விலை உயரும் வல்லுநர்கள்.

July 16, 2017

கத்தார் மீது அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டு !


தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் அரசு உதவி வருவதாக  அமெரிக்க நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவில் தீவிரவாத எதிர்ப்பு திட்டம் - சிஈபி என்ற நிறுவனம் இயங்கிவருகிறது.

இந்நிறுவனம் தீவிரவாத அமைப்புகளுக்கு கிடைத்துவரும் நிதியுதவி குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கத்தார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தீவிரவாதிகள், தீவிரவாத் அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ், தலிபான், ஐஎஸ் அமைப்புகளுக்கு கத்தார் உதவி வருகிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த அமைப்புகள் கத்தாரிடம் இருந்து உதவி பெறுகின்றன. இவ்விஷயம் குறித்து அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் இயங்கிவரும் வங்கிகள், விமான நிறுவனங்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். கத்தாருடன் கொண்டுள்ள உறவை மறுபரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு சிஈபி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

July 10, 2017

சர்வதேச நீதிமன்றத்தை அணுக கத்தார் முடிவு: அரபு நாடுகளின் தடையால் பெரும் பொருளாதார இழப்பு !


அரபு நாடுகளின் தடையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சட்டப்படியான இழப்பீடு கோர கத்தார் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. தடையின் காரணமாக அரசு நிறுவனமான கத்தார் ஏர்லைன்ஸ்க்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேறு பெரிய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் உள்ளிட்டோருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை ஈடுகட்ட சட்டவழிமுறைகளை பின்பற்றி தங்கள் மீது தடை விதித்துள்ள மற்ற அரபுநாடுகளிடம் இழப்பீடு கோரப்படும் என கத்தார் அரசின் தலைமை வழக்கறிஞர் தோஹாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கத்தார் தலைமை வழக்கறிஞரான அலி பின் பெதாயிஸ் மர்ரி, இழப்பீடு கோருவதற்காக சிறப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இழப்பீடு தொடர்பான புகார்களை பெற்று அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை இந்த கமிட்டி எடுக்கும் என்றார். உள்ளூர் நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச நீதி அமைப்புகளிடம் இதற்காக முறையிடப்படும் என்றார். சர்வதேச அளவில் அமலில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி 4 அரபு நாடுகள் மீதும் வழக்கு தொடர கத்தார் முடிவு செய்துள்ளது.

பொருளாதார இழப்பு மட்டுமின்றி தங்கள் நாட்டு மாணவர்கள், மற்ற அரபு நாடுகளில் தரக்குறைவாக நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள கத்தார், இதற்காக தனி வழக்கு தொடரப் போவதாகவும் கூறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக கூறி சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ , எகிப்து ஆகிய நாடுகள் ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் கத்தார் நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தன. உறவை புதுப்பிக்க மேற்கண்ட நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை ஏற்க கத்தார் அரசு மறுத்துவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

July 4, 2017

சவுதி அரேபியா நம்பிக்கை: கத்தார் சரியான அரசியல் முடிவுகளை எடுக்கும் !


அண்டை நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று கத்தார் அரசு சரியான அரசியல் முடிவுகளை எடுக்கும் என்று நம்புவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபீர் இவ்வாறு கூறியுள்ளார். அண்டை நாடுகளின் கோரிக்கையை ஏற்று பழையபடி உறவை தொடரவே கத்தார் மக்கள் விரும்புகின்றனர் என்றார் அவர்.

மேலும் பேசிய அவர் கத்தார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நோக்கம், அதன் தவறான கொள்கைகளை திருத்துவது மட்டுமே. அந்த கொள்கைகளால் கத்தாருக்கு மட்டுமின்றி உலகிற்கே ஆபத்து ஏற்படும் என்றார். கத்தார் நல்ல பதிலை தரும் என எதிர்பார்கிறோம். கத்தார் அளிக்கும் பதிலை பொறுத்து அடுத்த என்ன செய்வது என்பது குறித்து சவுதி முடிவெடுக்கும் என்றார்.

கடந்த 23-ம் தேதி 13 அம்ச கோரிக்கைகளை கத்தாரிடம் உறவை துண்டித்த நாடுகள் ஒன்றிணைந்து முன்வைத்தன. அவற்றை நிறைவேற்ற கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி, ஈரானுடன் உறவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூறி மற்ற அரபு நாடுகள் கத்தாரை தனிமைபடுத்தியுள்ளன.

June 27, 2017

துபாய் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டிற்கு பதிலாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி பயணிக்கும் வசதி !


துபாய்க்கு முதலில் நல்ல தோணியிலும் (பண்டைய வர்த்தக கலங்கள்) பின்பு கள்ளத்தோணியிலும் பயணங்கள் செய்தோம் பின்பு அதுவே பாஸ்போர்டிற்கு மாறியது.

பாஸ்போர்ட் ஒருபுறம் செல்லுபடியாகி கொண்டுள்ள நிலையில் ஸ்மார்ட் கேட் கார்டுகள் (Smart gate card) எனும் அட்டை வடிவ பாஸ்போர்ட்கள் அறிமுகமாயின பின்பு எமிரேட்ஸ் ஐடியே பாஸ்போர்ட்டாகவும், ஸ்மார்ட் கேட் கார்டாகவும் அங்கீகரிக்கப்பட்டன.

தற்போது நமது கையில் உள்ள ஸ்மார்ட் போன்களையே (Smart Phone) நமது பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடி, ஸ்மார்ட் கேட் கார்டு போன்றவற்றிற்கு பதிலாக பயன்படுத்தி துபை டெர்மினல் 3 விமான நிலையம் வழியாக பயணம் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். விரைவில் இந்த வசதி அனைத்து துபை விமான நிலைய டெர்மினல்களுக்கும் அனைத்து விமான சேவைகளுக்கும் (Dubai's all airport terminals & all airlines) விரிவுபடுத்தப்படவுள்ளது.

யுஏஈ வாலெட் (UAE Wallet App) எனப்படும் அப்ளிகேஷனை உங்களுடைய ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து அதிலுள்ள பார்கோடை ஸ்மார்ட்கேட்களில் காண்பித்து அத்துடன் உங்கள் கைவிரல் ரேகை பதிவையும் பதிந்து விட்டால் உங்களுடைய இமிக்கிரேஷன் சோதனை முடிந்துவிடும், எமிரேட்ஸ் ஐடியை பயன்படுத்தி இமிக்கிரேஷன் பணிகளை முடிப்பதைவிட இதன் மூலம் பயணி ஒருவர் 9 முதல் 12 நொடிகள் வரை இதில் மிச்சப்படுத்தலாம். இந்தத் திட்டத்தின் மூலம் வரிசையில் பயணிகள் நிற்பது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப கட்டமாக, பயணிகளின் ஸ்மார்ட் போன் யுஏஈ வாலெட் ஆப்பில் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஸ்மார்ட் கேட் கார்டு ஆகியவற்றின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

இரண்டாம் கட்டமாக, அமீரகத்தினர் மற்றும் அமீரகவாசிகளின் முழுவிபரங்களும் இந்த ஆப்பில் பதிவேற்றப்படுவதன் மூலம் எந்த அமீரக அரசின் துறைகளிலும் வேறு ஆவணங்களுக்கு பதிலாக இவற்றை பயன்படுத்தி வேலைகளை எளிதாக முடிக்கலாம்.

எமிரேட்ஸ் விமான நிறுவன அதிகாரி சாமி அகிலன் கூறியதாவது, பயணிகள் இனி தங்களுடைய பாஸ்போர்ட்டையோ, போர்டிங் கார்டுகளையோ இனி தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை, உங்களுடைய பெயர், இருக்கை எண், விமான எண் என அனைத்தும் இந்த யுஏஈ வாலெட்டின் பார்கோடில் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

யுஏஈ வாலேட்டை பெறுவது எப்படி?
முதலில் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து யுஏஈ வாலேட் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் பயணத்தேதிக்கு முன்பாக தேவையான விபரங்களை அதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பின்பு ஸ்மார்ட் கேட் வழியாக செல்லும் போது உங்களுடைய ஸ்மார்ட் போனில் காணப்படும் யுஏஈ வாலெட்டில் காணப்படும் பார்கோடை ஸ்கேன் மெஷினில் காண்பித்து பின் உங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்துவிட்டு ஹாயாக செல்லலாம். இவை அனைத்தும் சில நொடிகளில் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

June 6, 2017

அரபு நாடுகளின் அறிவிப்பால் கத்தார் வாழ் இந்தியர்களுக்கு பாதிப்பா?


அபுதாபி: அரபு நாடுகளின் திடீர் நடவடிக்கையால் கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் அடைய தேவை இல்லை என்று வெளிநாட்டு விவகாரங்களை கையாளும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கத்தார் நாட்டுடனான தூதரக உறவை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய 5 நாடுகள் அண்மையில் திடீரென துண்டித்தன. தீவிரவாத செயல்களுக்கு துணை போகும் வகையில் கருத்துகளை தெரிவித்தமைக்காகவும், அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதற்காகவும் கத்தார் மீது இந்த நடவடிக்கையை மேற்கண்ட 5 அரபு நாடுகள் எடுத்துள்ளன.
அமீரகத்தில் தங்கியிருக்கும் கத்தார் நாட்டை சேர்ந்தவர்கள் 14 நாட்களுக்குள் நாடு திரும்பவும், தூதரக அதிகாரிகள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் கத்தார் நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

26 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாட்டில் சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எரிவாயு நிறுவனம் மற்றும் கட்டுமான துறையில் பணியாற்றி வருபவர்கள். வரும் 2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காகவும் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.


மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடு
சுமார் ரூ.58 ஆயிரம் கோடி வர்த்தகத்துடன் கத்தார், இந்தியாவின் 19 வது பெரிய வர்த்தக கூட்டணி நாடாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு பாதிப்பா?
கத்தார் மீது அரபு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி பெட்ரோநெட்டின் நிதித் தலைவர் ஆர்.கே. கார்க் செய்தியாளர்களிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

நேரடி எரிவாயு கிடைக்கிறது
மேலும் அவர் கூறுகையில், "இதில் எந்த வித தாக்கமும் ஏற்படும் என்று நினைக்கவில்லை. நமக்கு கத்தாரில் இருந்து நேரடியாக எரிவாயு கிடைக்கிறது. எனவே எரிவாயு-எரிசக்தி இறக்குமதி உடனடியாக பாதிக் கும் வாய்ப்பில்லை" என்றார்.

இந்தியர்களுக்கு அச்சம் வேண்டாம்
மத்திய அபிவிருத்தி ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி இருதயராஜன் கூறுகையில், "கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் அச்சம் அடைய தேவையில்லை. அங்குள்ள இந்தியர் களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நிச்சயம் தெற்காசிய நாட்டவர்களுக்கு கத்தாரில் எதிர்கால பலன்களே அதிகம்" என்றார்.

தோகா சென்றால் சிக்கல்
அதே நேரம், கத்தார் விமானங்கள் தங்களது நாட்டுக்குள் நுழைய தடை விதித்து இருப்பதால் கத்தார் தலைநகர் தோகாவை மையமாக வைத்து மற்ற அரபு நாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

எண்ணெய் விலை அதிகரிக்கும்
வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் நெருக்கடி காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை அதிகரிக்கும் எனபொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அடிபணியுமா கத்தார்..? அடுத்த 48 மணிநேரங்களும் மிக முக்கியமானவை, மக்களை வெளியேறவும் உத்தரவு


கத்தாருடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டதன் எதிரொலியாக அந்த நாட்டுடனான விமான சேவையை அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை துண்டிப்பதாக பக்ரைன், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு ஆகிய 4 நாடுகள் தெரிவித்துள்ளன.

அடுத்த 48 மணிநேரத்திற்குள் கத்தார் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்ள இருப்பதாக குறித்த 4 நாடுகளும் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து 48 மணிநேரத்தில் தங்களின் தூதரக அதிகாரிகள் திரும்பப்பெறப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

அதேபோல் பஹ்ரைனில் உள்ள கத்தார் மக்களும் 2 வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கத்தார் உடனான விமானம் மற்றும் கடல்வழி போக்குவரத்தையும் படிப்படியாக நிறுத்த உள்ளதாகவும் பஹ்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் கத்தார் அரசு, செய்தி ஊடக ஊடுருவல், ஆயத பயங்கரவாத நடவடிக்கை, பஹ்ரைனில் நாசவேலையை செய்திடவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் ஈரானிய குரூப்புகளுக்கு நியுதவி செய்வதாகவும் பஹ்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

முக்கிய வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரக நாடுகள் கத்தாருடனான தொடர்பை துண்டித்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தோஹாவுக்கு நாள்தோறும் 4 முறை விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. துபாய் எமிரேட்ஸ் உட்பட மற்ற மூன்று வளைகுடா நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களின் சேவையை நிறுத்துவதாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கத்தார் நாட்டு மக்கள் திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

June 5, 2017

கத்தாருடன் அன்னம் தண்ணி புழங்காத அரபு நாடுகள்.. திடீர் முடிவுக்கு பின்னணி என்ன?


கத்தாருடனான ராஜாங்க உறவுகளை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் துண்டிப்பதாக அறிவித்துள்ளன.

இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் உதவுவதாக குற்றம்சாட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் அரபு நாடுகள்.
அண்டை நாடான கத்தாரை திடீரென புறக்கணிக்க இவர்களுக்கு ஏன் தேவை வந்தது என்ற கேள்வி உலகை துரத்திக் கொண்டுள்ளது. இதற்கு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு கத்தார் ஆதரவு அளித்தது என்ற ஒற்றை விடையை அளிக்க முடியும் என்றாலும் பின்னணியில் வேறு சில விவகாரங்களும் உள்ளன.

 ரொம்ப நாள் மோதல்
கத்தார் நாட்டின் அரசு நடத்தும் செய்தி வெப்சைட் ஒன்று ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அந்த நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், கத்தார் எமிர், ஈரான் மற்றும் இஸ்ரேல் குறித்து கூறிய கருத்துக்கள் போலியாக அந்த செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தது. ஆனால், கோபமடைந்த அண்டை அரபு நாடுகள், கத்தார் மீடியாவை தங்கள் நாட்டில் தடை செய்தது. தலைநகர் தோகாவில் இருந்து இயங்கிவரும் அல்-ஜசீரா செய்தி சேனலையும் அரபு நாடுகள் தடை செய்தன.

 முஸ்லிம் சகோதர அமைப்பு
கத்தார் எமிர் தமிம் பின் ஹமத் அல் தனி, ஈரான் பிரதமர் ஹசன் ரௌகானியுடன் நெருக்கம் காட்டியது பிற அண்டை நாடுகளுக்கு பிடிக்கவில்லை. எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மொர்சி, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்தவர். இந்த அமைப்பை அரபு எமிரேட்ஸ் நாடுகள் மமற்றும் சவுதி அரேபியா எதிர்த்து வருகிறது. ஆனால் கத்தாரோ, முகமது மொர்சியுடன் நெருக்கம் காட்டியது.

 தூதர்களை திரும்ப பெற்றன
2014ம் ஆண்டு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பக்ரைன் நாடுகள், கத்தாருக்கான தங்களது தூதர்களை திரும்ப பெற்றுக்கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தன. 8 மாதங்கள் கழித்து, தங்கள் தூதர்களை கத்தாருக்கு அவை திருப்பியனுப்பின. காரணம், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த சிலரை தங்ககள் நாட்டை விட்டு கத்தார் வெளியேற்றியது. ஆனாலும், கத்தார் மீண்டும் பழைய வேலைகளைத்தான் ஆரம்பித்தது.

தீவிரவாத குழுக்களுக்கு நிதி
மேற்கத்திய நாடுகள் கத்தாரை இந்த ஒரு விஷயத்தில் குற்றம்சாட்டியபடியேதான் உள்ளன. அது, அல்கொய்தா உள்ளிட்ட சிரியாவில் போரிடும் பயங்கரவாத குழுக்களுக்கு கத்தார் நிதி உதவி செய்து வருகிறது என்பதுதான். இதை கத்தார் மறது்து வருகிறது. ஆனால் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு கத்தார் நிதி உதவி செய்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

May 24, 2017

சர்வதேச அளவில் பேஸ்புக் மூலம் இணைந்து எளியவர்களுக்கு உதவும் தமிழக பெண்கள்


பேஸ்புக்கை வெறும் பொழுபோக்குகாக மட்டும் உபயோகபடுத்தாமல் அதன் மூலம்  ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடலாம் என பலர் திகழ்கின்றனர் அவர்களில் ஒரு குழுவாக‌ உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழக பெண்கள் பேஸ்புக் மூலம் இணைந்து பல்வேறு நலபணிகளை மேற்கொண்டு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்

உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும் தமிழ்ப் பெண்களை இணைக்கும் வகையில், பெண்களால், பெண்களுக்காக, பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு “மகளிர் மட்டும்” எனும் முகநூல் குழு துபாயில் வசிக்கும் தமிழக பெண்களால்  கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது.

பெண்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தவும், பெண்களுக்குள் புதைந்திருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொணர்வதற்கும், புதுவித யோசனைகள் மற்றும் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும் துவங்கப்பட்ட இக்குழுமம், கடந்த மாதம் சென்னை, கோவை, துபாய் மற்றும் மஸ்கட்டில்,'மகளிர் தினத்தை' முன்னிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தியது.

இதைத் தொடர்ந்து பெண்களைக் கொண்டு தேசத்தில் நேசத்தை வளர்க்கும் வகையில், சமூக நலன் கருதி, பசியால் வாடுவோருக்கு இலவசமாக உணவு வழங்கும் வகையில் ’Food for Good’ என்னும் திட்டத்தை நடத்தினர்,
இக்குழுமத்தில் உள்ள பெண்கள் தங்களால் இயன்ற பண உதவியைச் செய்து, சென்னையில் வசிக்கும் இக்குழுமத்தை சார்ந்த 10 பெண்கள், பத்மினி மாலா மற்றும் காயத்ரி கணேஷன் ஆகியோரது தலைமையில், கடந்த மாதம் தமிழ் புத்தாண்டு நன்நாளில், சென்னையில் சாலையோரத்தில் வாழும், வசிப்பிடமில்லா 350  ஏழைகளுக்கு அவர்களை மகிழ்விக்கும் வகையில் இலவசமாக உணவு வழங்கினர்

இதனை தொடர்ந்து மே 6-ஆம் தேதி, ’Give to Live' என்னும் பெயரில், Blood Connect India என்ற அமைப்புடன் இணைந்து, இக்குழு நிர்வாகி வகிதா-வின் தலைமையில், மீரா நட்ராஜன் மற்றும் பிரியதர்ஷினி அரவிந்த் உட்பட 8 தன்னார்வளர்களின் மேற்பார்வையில் அடையார் கேன்சர் மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடத்தினர். இதில் வேல்ஸ் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பெண்கள் 10பேர் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்..இரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

இதை அடுத்து, ‘Toy for Joy' என்ற திட்டத்தை செயல்படுத்தும் வகையில் துபாய், மதுரை, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் குழும உறுப்பினர்களின் வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பொம்மைகளை குழுமத்தின் நிர்வாகி வகிதா பானு,  துபாயிலிருந்து சென்னை சென்று, மே 8-ஆம் தேதியன்று, , பத்மினி மாலா மற்றும் ரேவதி செல்லதுரையின் உதவியுடன், , அவற்றை வில்லிவாக்கம் சேஃப் இந்தியா என்ற குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தனர்..குழந்தைகளுக்கு பொம்மை மற்றும் இனிப்பு வழங்கியதோடு, அவர்களோடு ஆடிப் பாடி உற்சாகமூட்டி, இறுதியில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதுபோன்று இன்னும் பல சமூக செயல்கள் - விவசாயிகளுக்கு உதவுவது, 12-ஆம் வகுப்பில் நன்மதிப்பெண் பெற்று மேற்படிப்பை தொடர இயலாத குழந்தைகளை படிக்க வைப்பது போன்ற இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தவிருப்பதாக துபாயில் வசிக்கும்  இக்குழுமத்தின் நிர்வாகி வகிதா பானு மற்றும் துணை நிர்வாகி பெனாசிர் பாத்திமா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

May 23, 2017

சிறையில் இருந்து விடுதலை ஆகும் கைதிகள் சொந்த நாடு திரும்ப உதவும் இந்திய தொழிலதிபர்


துபாய் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படும் வெளிநாட்டு கைதிகள் சொந்த நாடு திரும்புவதற்காக 130,790 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க முன்வந்துள்ளார் இந்திய தொழிலதிபர் ஒருவர். மும்பையில் பிறந்த பரோஸ் மெர்சண்ட் என்பவர், துபாயில் பியூர் கோல்ட் ஜூவ்ல்லர் நிறுவனத்தின் சேர்மனாக உள்ளார். இவர் வெளிநாட்டு கைதிகள் சொந்த ஊர் திரும்புவது தொடர்பாக அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி துபாய் சிறைகளிலிருந்து விடுதலையாகும் வெளிநாட்டு கைதிகள், தங்கள் சொந்த ஊர் திரும்பி குடும்பத்தினருடன் சேர அவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து தரப்படும். தாயகம் திரும்ப தயாராக உள்ள வெளிநாட்டு கைதிகள் பற்றிய விபரத்தை, மாதந்தோறும், தொண்டு நிறுவனம் அளிக்கும் போது நிதி ஒதுக்கப்படும். தற்போது 132 கைதிகள் விடுதலைக்காக 150,000 தினார்களை பிரோஸ் வழங்கியுள்ளார். இதுகுறித்து தொழிலதிபர் பிரோஸ் கூறியதாவது: இந்த குற்றவாளிகள் சூழ்நிலை கைதிகள். உண்மையான குற்றவாளிகள் அல்ல. கடன் காரணமாக அவர்கள் சிறையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

May 3, 2017

புதிய விசா கொள்கையின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாயில் உற்சாக வரவேற்பு


அமெரிக்க விசா வைத்து இருக்கும் இந்தியர்கள் அமீரகத்தில் தங்க அனுமதிக்கும் வருகை விசாவை நேற்று முன்தினம் முதல் அமீரகத்தின் அனைத்து குடியுரிமை வழங்கல் பிரிவு அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அமீரக வெளியுவுத்துறை அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்தியாவை சேர்ந்த ஒருவர் வருகை விசா பெறுவதற்காக அமெரிக்க விசாவுடன் துபாய் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கினார்.

அவருக்கு குடியுரிமைத்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்து அமீரகத்தில் தங்க அனுமதிக்கும் வருகை விசாவை வழங்கினர். அமீரக அரசு புதிதாக அனுமதித்த திட்டத்தின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை குடியுரிமைத்துறை அதிகாரிகள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த புதிய கொள்கையானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தகத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்.

புதிய விசா கொள்கையின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரின் புகைப்படத்தை துபாய் வெளியுறவு அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

April 20, 2017

துபாயில் திருக்குறளிசை 'சி.டி.' வெளியீட்டு விழாவில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு 'இளம்புயல்' பட்டம்


 துபாய்: துபாயில் ரிதம் ஈவென்ட்ஸ் திருக்குறளிசை குறுந்தகடு வெளியீட்டு விழாவை நடத்தியது.

இசையமைப்பாளர் பரத்வாஜ் இயக்கத்தில் உருவான திருக்குறளிசை குறுந்தகட்டை பரத்வாஜ், துபாய் எஸ்.எஸ். மீரான், ரிதம் ஈவென்ட்ஸ் சபேசன் மற்றும் சந்திரா ரவி முன்னிலையில் துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இயக்குநரும், ஈஸா அல்குரைர் குழும நிறுவனங்களின் சேர்மனுமான ஈஸா அல்குரைர் வெளியிட, திமுக இளைஞரணி துணைச் செயலாளரும், திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

தொகுதி பக்கமே தலை காட்டாது இருக்கும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தமிழகத்தில், தன் தொகுதியில் சாலை வேண்டும் என்பதற்காக டெல்லிக்கே சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து, தன் தொகுதி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு வரும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் அரசியலில் இன்னும் பல ஏற்றங்கள் காண வேண்டும் என அமீரகத் தமிழர்கள் அமைப்பு சிம்மபாரதி, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்

ஈஸா அல்குரைர் சிறப்புரையில், இங்கு மேடையில் பேசிய அனைவரின் பேச்சுகள் மூலம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இந்த இளம் வயதில் ஒரு மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக சேவை ஆற்றிவருவதை தான் அறிந்து கொண்டதாகவும், மகேஷ் அவர்கள் மென்மேலும் சிறப்புற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாக பாராட்டி பேசினார்
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, துபாய் அனைத்து தமிழ் அமைப்புகளின் சார்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு "இளம் புயல்" பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டத்தை திரு . ஈஸா அல்குரைர் வழங்க அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

பட்டத்தைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றிய அவர், அந்த பொய்யா மொழிப் புலவர் இயற்றிய உலகப் பொதுமறையின் இசைத்தகடு வெளியீட்டு விழாவில், இந்த பொய்யாமொழியின் புதல்வனாகிய தமக்கு இவ்விருது வழங்கப்படுவது தமக்கு பெருமையளிப்பதாகக் கூறினார்.

மேலும் இவ்விழாவில் துபாய் தமிழ் எஃப்.எம். துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாமாண்டு துவங்குவதை முன்னிட்டு, ஈஸா அல் குரைரும், அன்பில் மகேஷ் பொய்யா மொழியும், தமிழ் எஃப்.எம். அதிபர் ராம் முன்னிலையில் அதை கேக் வெட்டி துவக்கி வைத்தனர்
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர், ஶ்ரீகாந்த் தேவா, ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீத் யாஸீன், யுஏஇ தமிழ்ச் சங்கம் ரமேஷ் விசுவநாதன், அமீரகத் தமிழ் மன்ற தலைவர் ஆஸிஃப் மீரான் மற்றும் நஜ்முத்தீன் காக்கா, தமிழ்நாடு கல்சுரல் அசோசியேஷன் தலைவர் அஷ்ரஃப் அலி, முத்தமிழ் சங்க தலைவர் மோகன் பிள்ளை, அமீரகத் தமிழர்கள் அமைப்பு தலைவர் அமுதரசன் மற்றும் சிம்ம பாரதி,

தமிழ்த்தேர் பொதுச் செயலாளர் ஜியாவுதீன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான், துபாய் லேடீஸ் அசோசியேஷன் மீனா குமாரி பத்மநாபன், சமூக சேவைகள் ஜெஸிலா பானு, கவிஞர் ஃபாத்திமா ஹமீத், ரமாமலர், அபிவிருத்திஸ்வரம் ஜாகிர் ஹுசைன், திரிகூடபுரம் முஸ்தஃபா, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவர் பாலா உள்ளிட்ட துபாய் வாழ் அனைத்து தமிழர் அமைப்பினர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

April 18, 2017

துபாய் அமீரகத்தில் புதிய டிரைவர்களுக்கு 2 வருட லைசென்ஸ் மட்டுமே !


அமீரகத்தில் துபாய்  புதிய போக்குவரத்து சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிதாக லைசென்ஸ் எடுக்கும் அனைத்து டிரைவர்களுக்கும் 2 வருட லைசென்ஸ் மட்டுமே வழங்கப்படும்.

அமீரகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒருமுறையும், வெளிநாட்டவர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறையும் புதுப்பிக்கப்படும் என்றாலும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி லைசென்ஸ் பெற்றவர்களுக்கு மட்டும் அடுத்த புதுப்பித்தல் தேதி வரை பழைய நடைமுறையே செல்லும்.

அமீரக தேசிய போக்குவரத்து சபை (Federal Traffic Council) வழங்கும் அறிவுரைக்கேற்ப குறிப்பிட்ட சில வகைகளின் வருபவர்களுக்கு மட்டும் ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கோ லைசென்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் 'அந்த குறிப்பிட்ட வகையினர் யார்' என்பது குறித்து செய்தித்தாள்களில் விபரமில்லை.

அதேபோல் நாள்பட்ட தீராத வியாதியஸ்தர்கள், வலிப்பு நோய், கடும் நீரிழிவு உள்ளவர்களுக்கும் லைசென்ஸ் முற்றிலும் வழங்கப்படாது. மேலும் சுகாதாரத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள கணிணிவழித் தொடர்பு மூலம் இத்தகைய டிரைவர்களின் உடல்நலம் குறித்த தகவல்கள் பெறப்படும்.

குடியிருப்புப் பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்கள் 40 km/ph வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். வாகனங்கள் அதிக சப்தம் எழுப்பவும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களின் அருகில் செல்லும் பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கு என தனி தடம் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பாலைவன பைக் உட்பட அனைத்தும் கட்டாய பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய வாகனங்களை மணல் மற்றும் பாலைவெளிகளில் மட்டுமே இயக்க வேண்டும்
.
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே வாகனங்களில் முன்பக்கம் அமரவும், கட்டாயம் பாதுகாப்பு பெல்ட் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களின் முன்பக்கம் அமரும் பெரியவர்களோ, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளோ பாதுகாப்பு பெல்ட் அணியத் தவறினால் டிரைவர் மீது 400 திர்ஹம் அபராதமும் 4 கரும்புள்ளிகளும் விதிக்கப்படும் என்பது போன்ற பல புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Source: Gulf News

April 16, 2017

சவூதி அரேபியாவில் ATM களில் தமிழ் மொழி இணைப்பு..! தமிழக ATM களில் தமிழ் அகற்றம்.!.


சவூதி அரேபியாவில் உள்ள பிரபலமான வங்கியான  அல் ராஜ்ஹி ( AL RAJKI BANK)  வங்கியில் பணம் எடுப்பதற்க்காக  ATM மில் தமிழ் மக்களுக்கு பயண்படும் வகையில்  தமிழ் பதிவு செய்ய பட்டுள்ளது இதனால் அங்கே உள்ள சில தமிழ் மக்களுக்கு இது மிகவும் சுலபமாகவும் அமைந்துள்ளது என கூறப்படுகிறது…..

அதை போன்று இங்கே  என்னவென்றால் தமிழகத்தில் உள்ள SBI வங்கியில் உள்ள ATM யில் தமிழ் மொழியை நீக்கம் செய்யப்பட்டுள்ள்து.




முகநுாலில் வெளியான அடுத்த பரபரப்புத் தற்கொலை!! இலங்கைப் பெண்ணிற்கு குவைத்தில் நடந்த கொடூரம்….


ஒருவனை நம்பி காசு பணம் எல்லாவற்றையும் இழந்து இன்று தற்கொலைக்கு முயற்சி செய்யும் நிலைக்கு வந்த இலங்கைப் பெண் குவைத்தில் தத்தளிக்கும் காட்சிகள் முகநுாலில் வெளியாகியுள்ளது.
காதல் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி திரியும் கயவர்கள் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.எல்லாத்தையும் நம்பி தங்களை மட்டுமல்ல அனைத்தையும் இழந்து தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் இன்று ஏராளம்.
ஒருவனை பார்த்து பழகி பின்னர் அனைத்தையும் இழந்துவிட்டு அழுது புலம்புவதில் பலனில்லை.உங்களிற்கென்று ஒரு மனது இருக்கின்றது அது சொன்னபடி கேட்டிருப்பீர்கள் அதுதான் உன்மை.

ஆனால் அந்த மனது காதல் வயப்படும்போது அது அந்த இடத்தில் தான் சுற்றிக்கொண்டு இருக்குமே தவிரஅவர் நல்லவரா கெட்டவரா என அறிய முயற்சிக்காது.
இந்நிலையில் தான் உங்களிற்கு தகுந்த ஒருவரின் உதவி தேவைப்படுகின்றது.
அது தாய் தந்தையாக இருக்கலாம் அல்லது உங்களை புரிந்து கொண்ட நல்ல நண்பனாக,நண்பியாக இருக்கலாம்.அவர்களின் உதவியுடன் மேலும் செயற்படுவது நல்லது.
இவ்வாறு ஒருவனை நம்பி காசு பணம் எல்லாவற்றையும் இழந்து இன்று தற்கொலைக்கு முயற்சி செய்யும் நிலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை தான் இது.
இந்த சம்பவம் அனைத்து பெண்களிற்கும் ஒரு பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் இதனை வெளியிடுகின்றோம்.
இவரிற்கு நடந்த கொடுமைகள் இனி எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது.நடந்த சம்பவங்களை இந்த பெண் தனது முகனூலினூடாக வெளியிட்டுள்ளார்.
இந்தப் பெண்ணின் நிலை மிகவும் கவலை தரக்கூடிய ஒரு விடையம் தயவுசெய்து கரன் என்ற தம்பியோ அவர் நண்பர்களே உறவினர்களோ சற்று சிந்தனை செய்து இந்தப் பெண்ணிடம் பேசி நமது தாய்நாட்டிக்கு வரவழைக்கவும்.
இல்லை என்றால் இதற்கு பிறகு வரும் விளைவுகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெரிய பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்தும் காரணம் உலகம் முழுவதும் பரவலாக இந்த விடையத்தை இணையத்தளங்கள் ஊடாக பெரும்பாலான மக்கள் பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
என இன்னும் பல காட்சிகள் கொடூரமான முறையில் முக நூல் பதிவேற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.



March 22, 2017

லாட்டரியில் 1 மில்லியன் டாலர்கள் வென்றவரின் ஆசை?


கல்கரியை சேர்ந்த மனிதரொருவர் 6-49லாட்டரியில் 1-மில்லியன் டொலர்களை வென்றுள்ளார். இப்பணத்தை பயணங்களில் செலவழிக்க போவதாக இவர் தெரிவித்துள்ளார். இது ஒரு “அபரிதமான வெற்றி” என தெரிவித்தார். சரியானதா என உறுதி செய்ய சீட்டை இரு தடவைகள் வேறுபட்ட இரண்டு கடைகளில் சரிபார்த்ததாக கூறினார். ஸ்ரீவன்சன் என்ற இவர் கல்கரி தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு பல் பொருள் அங்காடியில் பிப்ரவரி 18-சீட்டை வாங்கியுள்ளார். இந்த வெற்றியில் ஒரு சில யோசனைகள் உள்ளன என தெரிவித்த இவர்-இந்த வெற்றியில் பயணம் ஒன்றை மேற்கொண்டு மகிழ்ச்சியடைவதும் அடங்குகின்றது. ஆரம்பத்தில் மெக்சிக்கோ செல்ல திட்ட மிட்டதாகவும் ஆனால் தற்;போது பிள்ளைகளுடன் பெரிய பயணம் ஒன்றை மேற்கொள்ள நினைத்தள்ளதாகவும் கூறினார். முன்னர் திட்டமிட்டதைவிட முன்னதாக இளைப்பாறவும் எண்ணியுள்ளார்.

March 13, 2017

ரூ.8 கோடிக்கு போன் நம்பரை ஏலத்தில் எடுத்த துபாய் வாழ் இந்தியர்


மொபைல் போன் விலை என்னவோ சில ஆயிரங்கள்  தான்; ஆனால், அதன் பேன்சி   எண்ணுக்கு கோடிகளில் ஏலம் நடக்கிறது; இதோ துபாயில் உள்ள இந்தியர் ஒருவர், ரூ.8 கோடிக்கு அப்படி ஒரு பேன்சி மொபைல்  எண்ணை ஏலத்தில் எடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர் பல்விந்தர் சஹானி. துபாயில்   வசித்து வருகிறார். இவர் கடந்த 1993ம் ஆண்டு குவைத்தில் ஆர்எஸ்ஜி சொத்து  மேலாண்மை நிறுவனத்தை தொடங்கினார். இது தவிர கார் டயர், உதிரிபாகங்கள்  உற்பத்தி நிறுவனங்களையும் இந்தியா, அரபு நாடுகளில் நடத்தி வருகிறார். கார் மற்றும் செல்போன்  நம்பர்களுக்கு ஏலம் நடந்தால் இவர் பங்கேற்காமல் இருக்க மாட்டார். அதுவும் இவருக்கு ராசியான 5 அல்லது 9 என்றால் விட மாட்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி துபாயில்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்திய செல்போன்  பேன்சி நம்பர் ஏலத்தில் கலந்து கொண்டார். அப்போது தனக்கு விருப்பமான  0588888888 என்ற செல்போன் நம்பரை 4.5 மில்லியன் திர்காம் பணத்திற்கு  பல்விந்தர் சஹானி ஏலத்தில் எடுத்தார். இதன் நம்மூர் மதிப்பு 8 கோடியே 16  லட்சத்துக்கு 49 ஆயிரத்து 21 ரூபாய்.

ஸ்மார்ட் பிளாட்டினம் என்ற திட்டத்தின் அந்த  தொலை தொடர்பு நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில் மொத்த 50 பேன்சி நம்பர்கள்  ஏலம் விடப்பட்டன.  இந்த 50 செல்போன் நம்பர்களில் பல்விந்தர் சஹானி ஏலத்தில்  எடுத்த செல்போன் நம்பர் தான் அதிகபட்சமாக ரூ.8 கோடிக்கு ஏலம் போனது. மற்ற  49 போன் நம்பர்களுடன் சேர்ந்து மொத்தம் 13 கோடியே 42 லட்சத்து 67,279 ரூபாய்க்கு ஏலம் போனது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விமான  நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்  எடுத்த பல்விந்தருக்கு விமானத்தில் பறக்க சிறப்பு சலுகை வழங்குவதாக அந்த  விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதியும் இவர்  பெயர் தலைப்பு செய்தியாக இடம் பிடித்தது. அதற்கு காரணம் இவர் வாங்கிய கார்  நம்பர் தான். அப்போது தனக்கு விருப்பமான மற்றும் ராசியான டி-5 என்ற நம்பரை  சுமார் 59 கோடி ரூபாய் கொடுத்து துபாய் மண்டல போக்குவரத்து நிறுவனத்திடம்  இருந்து ஏலத்தில் எடுத்தார். இந்த கார் தான் அவரது விருப்பமான ரோல்ஸ்  ராய்ஸ் காரின் பதிவு எண்ணாக உள்ளது.

March 9, 2017

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு விடிவு காலம் பிறக்கிறது... உதாரணமாகிறது அமீரகம்!


வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, `ஐக்கிய அரபு அமீரகம்' என்று அழைக்கப்படும் யு.ஏ.ஈ சற்று வித்தியாசமானது. வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில் 25 சதவிகிதம் எண்ணெய் வளம் உள்ளது. அடுத்து ஓமன் நாட்டில் 10 சதவிகிதம் இருக்கிறது. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமீரகத்தில் எண்ணெய் வளம் குறைவுதான். யு.ஏ.ஈ என்பது ஷார்ஜா, அபுதாபி, துபாய் போன்ற 7 நகரங்கள் இணைந்த ஒரு சிறிய நாடு. எண்ணெய் வளம் பெரிய அளவில் இல்லையென்றாலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு துபாய் என்ற நகரம் ஒன்றே போதும்.
வளைகுடா நாடுகளில் உற்பத்தியாகும் எண்ணையை வெளிநாடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் முக்கியத் துறைமுகம் துபாயில் இருக்கிறது.

வளைகுடாவில் நிறுவனங்களைத் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் துபாயைத்தான் தேர்தெடுக்கும். அதனால், வெளிநாட்டு நிறுவனங்களின் நிர்வாக அலுவலகங்கள் ஏராளமானவை இந்த நகரில் அமைந்துள்ளன. வளைகுடா நகரங்களில் துபாய் தவிர வேறு எங்கும் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்கிவிட முடியாது.
உள்ளுர் மக்களின் உதவியுடன் தொழில் தொடங்க முடியும். வளைகுடா நாட்டுப் பணம், நம் நாட்டுப் பணத்துக்கு மாற்றப்படும்போது லட்சங்களாக மாறிவிடுகிறது. உழைத்து முன்னேற விரும்பும் பல இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அமீரகத்தின் மொத்த மக்கள்தொகை 29 லட்சம். அதில் இந்தியர்களின் மக்கள்தொகை மட்டும் 9 லட்சம். மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் இந்தியர்கள். குருத்வாராக்கள், கிறிஸ்தவ கோயில்கள், இந்தியப் பள்ளிகள் இந்த நாட்டில் உள்ளன.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை சுகாதாரமற்ற தங்கும் வசதி. எந்த சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்றாத, மனித உரிமை மீறல்களைக்கொண்ட ஒரு பணியிடமும் சுகாதாரமற்ற தங்கும் இடங்களும்தான் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாழ்விடம். நெருக்கடியான ஓர் அறைக்குள் குறைந்தது 4 பேர்கள் தங்குவார்கள். சுகாதாரமற்ற கழிவறைகள். அடுக்குப் படுக்கைகளில் தொழிலாளர்கள் உறங்குவதைப் பார்க்க முடியும். இந்த நாடுகளில் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு மேலாக உழைக்கவேண்டியதும் இருக்கும். சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, அவர்களை விரைவில் நோயாளிகளாக மாற்றிவிடும். ஆனாலும், குடும்பச்சூழலைக் கருத்தில்கொண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த நாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள்.
`வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான வாழ்விடங்களை நிறுவனங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும்' என அமீரக அரசு பலமுறை உத்தரவிட்டும் பெரும்பாலான நிறுவனங்கள் அதைப் பின்பற்றுவதில்லை. இதையடுத்து, சட்ட திட்டங்களை கடுமையாக்க அமீரக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதத்துக்குள், அமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான வாழ்விட வசதிகளை அளிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. `இல்லையென்றால் 2 லட்சம் திர்ஹாம் அபராதமாக விதிக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில், `முஷாபா' என்ற தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் உள்ளது. இந்த நகரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அபுதாபி முனிசிபாலிட்டி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பகுதியில் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த அறிக்கையை ஏப்ரல் 6-ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள் E.H.S எனப்படும் சுற்றுச்சூழல், சுகதாரம், பாதுகாப்பு சர்வதேச விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக அபுதாபி முனிசிபாலிட்டி, போலீஸ், அரசு ஆகியவை இணைந்து இந்த வருடம் முதல் தொடர்ச்சியாக பணியாளர்களின் வாழ்விடங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் அபுதாபி தீவுப் பகுதி, பனியாஸ்,வாத்பா, ஷாம்பா போன்ற பகுதிகளில் பணியாட்களின் வாழ்விடங்களின் நிலை பரிதாபகராமானதாக இருக்கிறதாம்.

February 25, 2017

‘‘ஹைட்ரோ கார்பன் திட்டம்’’ சவுதி இளைஞரின் அபாய குரல்! அதிர்ச்சி வீடியோ!


புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் தமிழகத்தை சேர்ந்த திலீப் என்ற இளைஞர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தினால் சவுதி அரேபிய பூமி போல வறட்சியானதாக புதுக்கோட்டை மாவட்டமும் தரிசாக போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.

சவுதியில் எண்ணை கிணறு செயல்படுவதையும், ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் ஒப்பிட்டு அந்த வீடியோவில் அவர் பதிவு செய்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் மக்கள் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.